Thursday, May 7, 2009

குட்டி குட்டி தகவல்கள்!


  • காந்தி இறந்த அன்று அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு ரஷ்யா மட்டும்தான். காரணம் காந்திஜியின் கொள்கைகளான, அஹிம்சை முறைகளை ஒப்புக்கொள்ளாத அதிபராக ஸ்டாலின் இருந்தார்.


  • வானவெளி வீரர்கள் பூமியை சுற்றி வரும்போது, ஒவ்வொரு நாளும் 16 சூரியோதங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் காண்பார்கள்.


  • ஒவ்வொரு சிகரேட்டினாலும் புகைபிடிப்போருக்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது.


  • உலகிலேயே முதன்முதலில் 'செக்' எழுதி வங்கியில் கொடுத்து பணம் பெற்றவர் இங்கிலாந்து மன்னர் எட்வர்ட் என்பவர்தான். இது நிகழ்ந்தது கி.பி.1281 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி.


  • நாகலாந்தில் 3 மாவட்டங்கள் மட்டுமே உண்டு. இங்கு பிச்சைக்காரர்கள் அறவே இலர். ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளது.


  • காண்டாமிருகத்தின் கர்ப்பகாலம் பதினெட்டு மாதங்கள். ஒரே நேரத்தில் ஒரே குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். இதன் ஆயுள் ஐம்பது ஆண்டுகள்.


  • திருப்பதி கோவிலை கட்டியவன் ஒரு தமிழன் என்பது பலருக்கு தெரியாது. சோழ மன்னன் கருணாகர தொண்டைமானே இந்த சிறப்புக்குரியவன்.

தகவல் உதவி: கல்கண்டு பத்திரிகை

4 comments:

  1. Good informations

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான செய்திகள்.நன்றி.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் ...பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  4. //காந்தி இறந்த அன்று அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு ரஷ்யா மட்டும்தான். காரணம் காந்திஜியின் கொள்கைகளான, அஹிம்சை முறைகளை ஒப்புக்கொள்ளாத அதிபராக ஸ்டாலின் இருந்தார்//

    மற்ற எல்லா தகவலையும் நான் கேள்விபட்டிருக்கிறேன்.
    ஆனா காந்தி விஷயம் புதுசு. நன்றி

    ReplyDelete