Monday, May 18, 2009

சொன்னதை சிந்திப்போம்!

  • எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து ஏமாந்து விடாதே. யாரிடமும் அன்பைப் பெற்று ஏமாற்றி விடாதே. - விவேகானந்தர்


  • கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்க முடியாவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்? - அன்னை தெரசா


  • அதிகமாக சிரிக்கும் மனிதனும், சிரிக்க வைக்கும் மனிதனும் அவன் மனதுக்குள் மிகப் பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்ளின்


  • கல்வியும் செல்வமும் எவ்வளவு இருந்தாலும் அடக்கம் இல்லாவிட்டால் பண்பாடென்பது இல்லை. - ராஜாஜி


  • வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது. நடத்தையிலும் இருக்க வேண்டும். - டில்டன்


  • கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை செய். அடுத்த கடமை என்னவென்று தானே புலப்படும். - கார்லைல்


  • நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை. - பூவேஷ்டர்

நன்றி: அ. அப்துல்காதர், மேற்கு தாம்பரம்

Thursday, May 14, 2009

செய்தியின் நிறம் சிவப்பு!

  • செவ்வாய்க் கிரகத்திற்கு சிவப்பு கிரகம் என்று பெயர்.


  • காண்டாமிருகம் சிவப்புநிற வியர்வையை வெளியிடும்.


  • லாக்கா பூச்சியின் செந்நிறப் பிசின்தான் அரக்கு.


  • தடை செய்யப்பட்ட நூல்கள் சிவப்பு புத்தகம் எனப்படும்.


  • சிவப்பு புத்தகம் என்ற நூலை எழுதியவர் மாவோ


  • சிவப்பிந்தியர்கள் மங்கோலிய இனத்தை சார்ந்தவர்கள்.


  • செஞ்சதுக்கம் மாஸ்கோவில் உள்ளது.


  • வியட்நாமில் ஓடும் ஒரு நதியின் பெயர் சிவப்பு நதி.


  • ரஷ்ய மொழியில் சிவப்பு என்பதற்கும் அருகு என்பதற்கும் ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது.

தகவல் உதவி: நெ.இராமன், கல்கண்டு பத்திரிகை

Friday, May 8, 2009

நான் ரசித்த எஸ்எம்எஸ் (SMS)

சினுங்கிய செல்போனுக்குள் சிக்கிய சிந்தனைகள்!
மொபைல் சமாச்சாரம் என்பதனால் ஆங்கிலம் அவசியமாகிபோனது!


  • Dont share your secrets with others,
    B'coz if you cannot keep your secrets with you, dont expect others to keep your secrets with them!


  • You are not responsible for what people think about you..
    But, you are responsible for what you give them to think about you!


  • Every new idea is a joke. Until, one man achieves it!


  • Life means missing expected things and facing unexpected things.
    When you are right no one remembers.
    But..when you are wrong no one forgets..
    Thats life!


  • Successful management thought:
    If you don't like the rule, follow it and reach the top then change the rule!


  • Your best success comes after your greatest disappointment" -
    so never feel for ur failure. Know that you are being tested for your consistency.


  • Sometime words are not comfortable to express our feelings...
    But, our true lovable friend understand our feelings without any words.


  • Achievers never expose themselves, but their achievements expose them.


  • Success in life will create crowd for YOU...
    Loneliness in life will create space for YOU...
    But, tough times in life will create the true person in YOU...!


  • You cannot change your future...
    But, you can change your habits...
    And sure your habits will change your future.


  • Everyone thinks of changing the world,
    but, no one thinks of changing himself...


  • Everybody wants to go to heaven,
    but, nobody wants to die!

நன்றி: SMS நண்பர்கள்

Thursday, May 7, 2009

குட்டி குட்டி தகவல்கள்!


  • காந்தி இறந்த அன்று அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு ரஷ்யா மட்டும்தான். காரணம் காந்திஜியின் கொள்கைகளான, அஹிம்சை முறைகளை ஒப்புக்கொள்ளாத அதிபராக ஸ்டாலின் இருந்தார்.


  • வானவெளி வீரர்கள் பூமியை சுற்றி வரும்போது, ஒவ்வொரு நாளும் 16 சூரியோதங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் காண்பார்கள்.


  • ஒவ்வொரு சிகரேட்டினாலும் புகைபிடிப்போருக்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது.


  • உலகிலேயே முதன்முதலில் 'செக்' எழுதி வங்கியில் கொடுத்து பணம் பெற்றவர் இங்கிலாந்து மன்னர் எட்வர்ட் என்பவர்தான். இது நிகழ்ந்தது கி.பி.1281 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி.


  • நாகலாந்தில் 3 மாவட்டங்கள் மட்டுமே உண்டு. இங்கு பிச்சைக்காரர்கள் அறவே இலர். ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளது.


  • காண்டாமிருகத்தின் கர்ப்பகாலம் பதினெட்டு மாதங்கள். ஒரே நேரத்தில் ஒரே குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். இதன் ஆயுள் ஐம்பது ஆண்டுகள்.


  • திருப்பதி கோவிலை கட்டியவன் ஒரு தமிழன் என்பது பலருக்கு தெரியாது. சோழ மன்னன் கருணாகர தொண்டைமானே இந்த சிறப்புக்குரியவன்.

தகவல் உதவி: கல்கண்டு பத்திரிகை

Tuesday, May 5, 2009

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மிஷின் (இவிஎம்)



  • எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மிஷின் (இவிஎம்) என்பது கட்டுப்பாட்டு மிஷின், ஓட்டுப்பதிவு மிஷின், ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.

  • இந்தியாவில் முதல் முதலாக இவிஎம் 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வடக்கு பரவூர் தொகுதிக்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது.

  • ஒரு இவிஎம்மில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர் இடம்பெறும். 64 வேட்பாளர்கள் வரை போட்டிஎடும் தொகுதிகளில் 4 இவிஎம்களை இணைத்து பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் வேட்பாளர்கள் எண்ணிக்கை சென்றால் பழைய ஓட்டு சீட்டு முறை கையாளப்படும்.

  • ஒரு இவிஎம்மில் அதிகபட்சம் 3,840 ஓட்டு வரை பதிவு செய்யலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒரு வாக்குசாவடியில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருக்கமாட்டார்கள்.

  • ஒரு இவிஎம் விலை ரூ.9,400
  • தேர்தல் கமிஷனிடம் 8 லட்சம் இவிஎம்கள் உள்ளன.

  • இவிஎம்மில் பதிவாகும் ஓட்டு 10 ஆண்டுகளுக்கு மேலும் அதன் நினைவகத்தில் அழியாமல் பத்திரமாக இருக்கும்.
  • இவிஎம் மிஷின் 6 வோல்ட் டிசி மின்சாரத்தில் இயங்குகிறது. எனவே ஷாக் அடிக்கும் என்று பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

  • இவிஎம் பயன்படுத்துவதால் செல்லாத ஓட்டுகள் என்பதே இருக்காது. மேலும் ஏராளமான காகிதமும் மிச்சமாகும்.

  • பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹைதரபாத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகியவை இவிஎம்மை தயார் செய்கின்றன.

  • மின் இணைப்பு இல்லாவிட்டாலும் பேட்டரிகள் மூலம் இவிஎம்களை பயன்படுத்தலாம்.

    வாக்களிப்பது நம் கடமை.
    தவறாமல் வாக்களிப்போம்.


தகவல் உதவி: தினமலர் நாளிதழ்