Tuesday, May 5, 2009

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மிஷின் (இவிஎம்)



  • எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மிஷின் (இவிஎம்) என்பது கட்டுப்பாட்டு மிஷின், ஓட்டுப்பதிவு மிஷின், ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.

  • இந்தியாவில் முதல் முதலாக இவிஎம் 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வடக்கு பரவூர் தொகுதிக்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது.

  • ஒரு இவிஎம்மில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர் இடம்பெறும். 64 வேட்பாளர்கள் வரை போட்டிஎடும் தொகுதிகளில் 4 இவிஎம்களை இணைத்து பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் வேட்பாளர்கள் எண்ணிக்கை சென்றால் பழைய ஓட்டு சீட்டு முறை கையாளப்படும்.

  • ஒரு இவிஎம்மில் அதிகபட்சம் 3,840 ஓட்டு வரை பதிவு செய்யலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒரு வாக்குசாவடியில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருக்கமாட்டார்கள்.

  • ஒரு இவிஎம் விலை ரூ.9,400
  • தேர்தல் கமிஷனிடம் 8 லட்சம் இவிஎம்கள் உள்ளன.

  • இவிஎம்மில் பதிவாகும் ஓட்டு 10 ஆண்டுகளுக்கு மேலும் அதன் நினைவகத்தில் அழியாமல் பத்திரமாக இருக்கும்.
  • இவிஎம் மிஷின் 6 வோல்ட் டிசி மின்சாரத்தில் இயங்குகிறது. எனவே ஷாக் அடிக்கும் என்று பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

  • இவிஎம் பயன்படுத்துவதால் செல்லாத ஓட்டுகள் என்பதே இருக்காது. மேலும் ஏராளமான காகிதமும் மிச்சமாகும்.

  • பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹைதரபாத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகியவை இவிஎம்மை தயார் செய்கின்றன.

  • மின் இணைப்பு இல்லாவிட்டாலும் பேட்டரிகள் மூலம் இவிஎம்களை பயன்படுத்தலாம்.

    வாக்களிப்பது நம் கடமை.
    தவறாமல் வாக்களிப்போம்.


தகவல் உதவி: தினமலர் நாளிதழ்

No comments:

Post a Comment